சரவாக், ஆகஸ்ட் -31, பிரபல உள்ளூர் மலாய் பாடகர் ஹஃபிஸ் சுயிப் (Hafiz Suip), சாலையில் ஓர் ஆடவருடன் சண்டையிடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் சரவாக்கில் நிகழ்ந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை, Hafiz-சுடனிருந்த நண்பர் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து, இரசிகர் ஒருவரது வீட்டுக்குச் செல்வதற்காக பரிசு வாங்கப் போகும் வழியில், Hafiz-சின் காரை பின்னால் வந்த கார் முட்டியது.
இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி குத்திக்கொண்டனர்.
காரை நகர விடாமல் தடுத்ததோடு, Hafiz முகத்தில் திடீரென பெப்பர் ஸ்பிரேயை (pepper spray) அந்நபர் அடித்து விட்டார்.
என் முகத்திலும் கையால் இடித்து, எனக்கும் spray அடித்ததால் கோபத்தில் நானும் அந்நபரைக் குத்தினேன் என அந்த நண்பர் கூறிக் கொண்டார்.
பிறகு அது போலீசில் புகார் செய்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றோம் என்றார் அவர்.