Latestசிங்கப்பூர்
சிங்கப்பூர் செல்லும் மலேசிய டேக்ஸிகளுக்கு அதிர்ச்சி: 2027 முதல் நுழைவுக் கட்டணம் 15 டாலராக உயர்வு

சிங்கப்பூர், ஜூன்-26 – சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசிய டேக்ஸிகளுக்கான கட்டணத்தை உயர்த்த அந்நாட்டரசு முடிவு செய்துள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் செல்லும் டேக்ஸிகளுக்கு ஒரு முறை பயணிக்க 15 சிங்கப்பூர் டாலர் அதாவது சுமார் 48 ரிங்கிட் நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள 2 டாலர் மாதாந்திர அனுமதி கட்டணத்திற்குப் பதிலாக இப்புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இரு நாட்டு டேக்ஸி ஓட்டுநர்களுக்கும் இடையிலான இயக்கச் செலவு இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து வாரியமான LTA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முறையான காப்பீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை உறுதிச் செய்ய, பயணிகள் அனைவரும் உரிமம் பெற்ற டேக்ஸிகளை மட்டுமே பயன்படுத்துமாறு LTA அறிவுறுத்தியுள்ளது.



