
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 — செப்பாங் புத்ரா பெர்டானா பகுதியில், ஆடவன் ஒருவன் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் 12 வயது சிறுமி காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை நேற்று மாலை
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தின் போது சிறுமியின் முகம், கழுத்து மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டன என்றும் உடனடியாக அண்டை வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்றும் என்று செப்பாங் துணை காவல்துறைத் தலைவர் ஜி.கே. ஷான் கோபால் தெரிவித்துள்ளார்.
தற்போது அச்சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என்றும் அறியப்படுகின்றது.
இக்குற்றம் மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு, மேல் விசாரணை தொடரந்து நடைபெற்று வருகின்றது.