Latestமலேசியா

சிறார் பாலியல் துன்புறுத்தல்; வங்காளதேசியை மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்திய FBI

வாஷிங்டன், மார்ச்-6-அமெரிக்காவின் மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI, சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த வங்காளதேச ஆடவரை, மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியுள்ளது.

28 வயது Zobaidul Amin எனும் அவ்விளைஞர், அனைத்துலக அளவில் இணையம் வாயிலாக குழந்தைகளை பாலியல் சுரண்டல் செய்யும் கட்டமைப்பை நடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டதாக FBI இயக்குநர் Kash Patel கூறினார்.

அதற்காக மலேசிய அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார்.

மலேசியாவில் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் ஏற்றுவதற்காக சந்தேக நபரை, 3 FBI அதிகாரிகள் அழைத்துச் செல்லும் புகைப்படமொன்றையும் Patel வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம், அனைத்துலக அளவில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் மலேசியா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!