
ஷா ஆலம், ஜூலை 21 – சிலாங்கூர் பண்டார் புக்கிட் திங்கியில், வங்கி பாதுகாப்பு வாகனத்திலிருந்த 82,000 ரிங்கிட் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரின் திட்டம் தோல்வியடைந்தது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் (Datuk Shazeli Kahar) கூறுகையில், முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்த அந்த மர்மநபர், துப்பாக்கியைக் காட்டி பாதுகாப்பு காவலரை மிரட்டியுள்ளார். ஆனால், பாதுகாப்பு காவலர் பணம் இருந்த பையை உடனடியாக வாகனத்திற்குள் வைத்து கதவை மூடியதால், பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.
எனினும், மர்மநபர் பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இந்தச் சம்பவத்தில் ஒரே நபரே ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது



