Latestமலேசியா

சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவு; MCMC விசாரணை

கோலாலம்பூர், நவம்பர் 4 – சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் முகநூல் பதிவு தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இப்பதிவு இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R உணர்வுகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணைக்கு உதவும் வகையில், சம்பந்தப்பட்ட நபரிடம் ஸ்ரீ பெட்டாலிங் காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், அவருடைய கைப்பேசி மற்றும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 இலட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய பொய்யான தகவல்கள் மற்றும் அரச குடும்பத்தை அவமதிக்கும் பதிவுகளை இணையத்தில் பரப்புவதைத் தவிர்க்குமாறு MCMC பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!