Latestமலேசியா

சுக்மா 2026 ஒட்டுமொத்த சாம்பியன்: சிலாங்கூரில் செப்டம்பர் 1 சிறப்பு விடுமுறை – அமிருடின்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-25-2026 சுக்மா போட்டியில் சிலாங்கூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதை முன்னிட்டு, செப்டம்பர் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாநில சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​ஷா ஆலாம், அனேக்கா வாக்கில் (Aneka Walk) நடைபெற்ற சுக்மா நிறைவு விழாவில் உரையாற்றிய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் ராஜா மூடா Tengku Amir Shah, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ​வீரர்களின் அபார உழைப்பு மற்றும் சுமார் 10 ஆயிரம் தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமிருடின் குறிப்பிட்டார்.

​இந்த சுக்மா போட்டியில் 101 தங்கம், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலம் என மொத்தம் 245 பதக்கங்களை வென்று சிலாங்கூர் மாபெரும் சாதனை படைத்துள்ளது.இதன் மூலம் ஆரம்ப இலக்கான 80 தங்கப் பதக்கங்களையும் சிலாங்கூர் கடந்துள்ளது.

​இப்பட்டியலில் 51 தங்கப் பதக்கங்களுடன் கூட்டரசு பிரதேசம் இரண்டாம் இடத்தையும், திரங்கானு 43 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.அடுத்த சுக்மா போட்டி 2028-ல் கிளந்தானில் நடைபெறும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!