Latestமலேசியா

செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து

Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிள்ளானில் அண்மையில் மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் மரண விபத்தை ஏற்படுத்திய இளைஞரைப் போலவே, இந்த லாரி ஓட்டுநர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டுமென, நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தின் வீடியோவைப் பார்க்கும் போதே லாரி ஓட்டுநர் தெளிவில்லாமல் இருப்பது தெரிகிறது; எந்தவித முயற்சியும் செய்யாமல், நேரடியாகவே வேனை அவர் மோதியிருப்பது தெரிகிறது.

எனவே, போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோபவர்களால் ஏற்படும் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் சாலை, அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என, நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினருமான அருள் கூறினார்.

ஓட்டுநர் யார் என்பது முக்கியமல்ல. சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு தாம் வலியுறுத்த விரும்புவதாக, ஃபேஸ்புக் வாயிலாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!