
தமது இந்தியப் பயணத்தில் சென்னைக்கும் செல்வதற்கு மலேசியா காட்டிய விருப்பத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்-யின் அலுவலகம் முறையாக பதிலளிக்கவில்லை எனும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இருவரின் அட்டவணைக்கு ஏற்ப விஜய்-யின் நேரத்தை ஒதுக்குவதற்கு சிரமமாக இருப்பதாக அவரது அலுவலகம் முன்னதாகவே தெரிவித்திருந்தாக அன்வார் கூறினார். அப்படி இருந்தும் கூட சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்க அவர் முயற்சித்தார் என்றார் அவர்.
இந்தியாவின் தந்தி டிவிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு விளக்கியுள்ளார்.
நானும் அதற்குள் புதுடில்லிக்கு வந்துவிட்டதால் சிறிய இடைவெளிக்குள் அதற்கேற்ப நேரத்தை மாற்றுவதற்கு சிரமமாக இருந்தது.
இதற்கிடையில் அவருக்கும் முதலீடு தொடர்பாக முக்கிய வெளிநாட்டுப் பயணக் கடாப்பாடு இருந்ததால் நான் தான் பரவாயில்லை சென்னைக்குப் பதிலாக நான் இம்முறை கேளராவிற்கும் மாலத்தீவிற்கும் செல்கிறேன் என்றேன்.
பதிலாக விஜய் மலேசியவிற்கு வரக்கூடும் எனவும் அப்பேட்டியில் அன்வார் கூறியுள்ளார்.



