Latestமலேசியா

செமெஞ்சேவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவரும் பெண்ணும் சடலமாக மீட்பு

செமஞே, ஆகஸ்ட்-27,சிலாங்கூர், செமஞே Vista Valley பகுதியில் உள்ள பேரங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 48 வயது ஆடவரும், 43 வயது பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

​நண்பர்களான அவ்விருவரும் கடந்த சில நாட்களாக வீடு திரும்பாமலும், தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த நிலையில் காரின் முன் இருக்கைகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

​வாகனத்தில் எவ்வித உடைப்புகளோ அல்லது உடல்களில் காயங்களோ இல்லாத நிலையில், குற்றவியல் கூறுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றார் அவர்.

எனவே, ​இச்சம்பவம் தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

காஜாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனை மற்றும் ஆய்வுக் கூட முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக நாஸ்ரோன் மேலும் கூறினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!