Latestமலேசியா

ஜார்ஜ்டவுன் வணிக வளாகக் கழிவறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் குற்றச்சாட்டை மறுப்பு

ஜார்ஜ்டவுன், அக்.06–பினாங்கு, ஜார்ஜ்டவுனில் வணிக வளாகம் ஒன்றின் கழிவறையில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்டதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 71 வயது முதியவர் மறுத்து விசாரணை கோரினார்.

நீதிபதி முன்னிலையில் Hokkien மொழியில் இரு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன. அக்டோபர் 1ஆம் தேதி மாலை 4.30 மணியளவில், வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதே இடத்திலும் நேரத்திலும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. முதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டலாம். இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் அதே தண்டனையை அவர் எதிர்நோக்கலாம்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10,000 ரிங்கிட் பிணைத்தொகை கோரப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது வழக்கறிஞர் குறைந்த பிணைத்தொகையைக் கோரினார்.

அதனை அடுத்து நீதிமன்றம் இரு குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் 14,000 ரிங்கிட் பிணைத்தொகையை ஒரு ஜாமீனுடன் நிர்ணயித்தது.

மேலும், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அவ்வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 16ஆம் தேதி விசாரிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!