Latestமலேசியா

ஜூலை 1 முதல் 60,000-க்கும் மேற்பட்ட புதிய கடப்பிதழ்கள் வழங்கப்பட்டன

சைபர்ஜெயா, ஜூலை 22 – ஜூலை 1 முதல் இதுவரை, நாடு முழுவதும் 63,475 புதிய மேம்படுத்தப்பட்ட மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தற்போது இந்த புதிய கடப்பிதழ் வழங்கும் பணி மூன்றாவது கட்டத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டிலுள்ள பல குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் ஏற்கனவே இந்த புதிய கடப்பிதழை வழங்கி வருகின்றன.

புதிய கடப்பிதழில் 94 பாதுகாப்பு அம்சங்கள் உள்ள நிலையில் பழைய கடப்பிதழில் 49 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், புதிய கடப்பிதழை போலியாக தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

இந்த புதிய கடப்பிதழில் ஹோலோகிராம், புற ஊதா (UV) அச்சு, மறைக்கப்பட்ட பாதுகாப்பு குறியீடுகள் உள்ளிட்ட பல புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், அது சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. மலேசியா 1998-ஆம் ஆண்டிலேயே மின்னணு கடப்பிதழை (ePassport) அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடுகளில் ஒன்றாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!