Latestமலேசியா

ஜோகூர் தேர்தல் : வைரலான BN வேட்பாளர் பட்டியல் போலியானது – ஓன் ஹஃபிஸ்

ஜோகூர் பாரு, ஜூன்-3 –சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் செயலியிலும் பரவி வரும் ஜோகூர் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் வேட்பாளர் பட்டியல் முற்றிலும் போலியானது என்றும், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஜோகூர் பாரிசான் தலைவரும் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான BN வேட்பாளர்கள் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூட்டணியின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.

தேர்தல் காலங்களில் வதந்திகள், அவதூறுகள், தூண்டுதல்கள் மற்றும் போலிச் செய்திகள் பரவுவது வழக்கமான ஒன்றாகும் என்றும், அவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, எந்த தகவலையும் நம்புவதற்கும் பகிர்வதற்கும் முன்பு அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஜோகூர் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அரசியல் கட்சிகள் அனைத்தும் பொறுப்புடனும் நெறிமுறையுடனும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும், போலிச் செய்திகள் மாநிலத்தின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் ஜனநாயக செயல்முறையை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஓன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடவுள்ள BN வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கியதாகக் கூறப்படும் பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!