
ஜோகூர் பாரு, ஜூலை 21 – நேற்று காலை, ஜாலான் ஜோகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையில், லாரி மீது கார் மோதிய சம்பவத்தில், இ-ஹெய்லிங் டிரைவரும் சிங்கப்பூர் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
48 வயது உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் இடது பின்புறத்தில் மோதியுள்ளதென்று வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறியுள்ளார்.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், சுல்தானா அமினா மருத்துவமனையில் (HSA) சிகிச்சையின் போது அந்த சிங்கப்பூர் பயணியும் உயிரிழந்துள்ளார் என்றும் அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 28 வயதான உள்ளூர் லாரி ஓட்டுநர் எந்த காயங்களுமில்லாமல் உயிர் தப்பியுள்ளார்.
இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரை தொடர்புக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.