
தஞ்சோங் காராங், அக்-09-சிலாங்கூர், தஞ்சோங் காராங்கில் 20 டன் லாரியின் பின்புறத்தில் Proton Exora கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
Bukit Talang, Jalan Raja Musaவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் பலியானவர்கள் 44 வயது ஓட்டுநர் Norawalysa Mat Talpi, அவரது 12 வயது மகள், 8 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களுடன் பயணித்த 10 வயதான மற்றொரு மகன் தலையில் காயமடைந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
Bestari Jayaவில் இருந்து தஞ்சோங் காராங் நோக்கிச் சென்ற Exora கார், டயர் வெடித்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதாக கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் Azaharudin Tajudin தெரிவித்தார்.
அவ்விபத்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தை 03-32891222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



