Latestமலேசியா

பேராக் சுங்கை மானிக் கிராம மக்களின் 50 ஆண்டுகால நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் – சிவநேசன் உறுதி

பேரா , பொன்டொக் தஞ்சோங்கில் உள்ள சுங்கை மானிக் கிராம மக்கள் எதிர்நோக்கி வரும் நிலப் பிரச்சினைகள் ஓரிரு ஆண்டுகளாக நீடித்து வந்தவை அல்ல.

சுமார் 40 முதல் 50 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளாகும்.
பல ஆண்டுகளாக நில உரிமைக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்தும் தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது இத்தகைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்பட்டு வருவது மாநில இந்நிய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிஙநேசன் கூறினார்

இதற்கிடையே, இன்று காலை தம்மைச் சந்தித்தந்த கிராம மக்களில் சிலர் நிலப் பிரச்சினை குறித்து தம்முடைய கவனம் கொண்டு வந்ததாக டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் இந்தியர்கள், சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் எனப் பல இனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலப்பிரச்சனை சுமார் 40 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வருவதாக அவர்கள் தம்மிடம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினையை முன்பு ஒருவர் தலைமையேற்று முன்னெடுத்து வந்த நிலையில், அவர் காலமானதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் முடங்கிப் போயின. இதனால் நில உரிமைக்காகக் காத்திருந்த குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும், இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நில அலுவலக அதிகாரியுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் பேராக் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் அடுத்த வியாழக்கிழமை வரை நீடிக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் நில உரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.

40 முதல் 50 ஆண்டுகளாகத் தீர்வுக்காகக் காத்திருக்கும் இந்த மக்களின் நிலப் பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!