Latestமலேசியா

பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த SPM மாணவர் காயம்!

பத்து பஹாட், நவ.24-ஜோகூர், பத்து பஹாட்டில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து, 17 வயதுடைய SPM தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் காயமடைந்தார். அச்சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 12.15 மணியளவில் நிகழ்ந்ததாக பத்து பஹாட் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.

SPM தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மாணவர் கீழே விழுந்ததை பள்ளி நிர்வாகம் கண்டறிந்தது. அதில் அம்மாணவரின் கால்களிலும் வாய்ப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

காயமடைந்த மாணவர் உடனடியாக சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை, பாதிக்கப்பட்ட மாணவரிடமிருந்தோ அவரது குடும்பத்தினரிடமிருந்தோ அதிகாரப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயல் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அச்சம்பவத்தில் வேறு எந்தத் தரப்பினருக்கும் தொடர்பு இல்லை என்றும் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.

எனவே ஆதாரமற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். பத்து பஹாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் கீழே விழுந்ததாக இதற்கு முன் செய்திகள் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!