
வியட்னாம், Ho Chi Minh Cityயில் இயங்கி வரும் ஓர் இந்திய உணவகம் அங்கு வந்திருந்த குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அக்குடும்பத்தினர் தங்களது உடைமைகளைக் கேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உணவகப் பணியாளர்களையும் மிரட்டியதாகக் கூறியது.
அக்குடும்பத்துடன் வந்திருந்த சிறு பிள்ளையொன்று திசு பேப்பரை அங்காங்கே வீசிக் கொண்டிந்ததைத் தொடர்ந்து தமது பணியாளர்கள் அதனை நல்ல முறையில் எடுத்துச் சொல்ல முயன்ற போது, வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்களை ஊடகப் பிரபலம் எனக் கூறிக் கொண்ட அக்குடும்பத்தினர் பின்னர் தமது பணியாளர்களிடம் அத்துமீறியதால், நிலைமை கைமீறிப் போனதாக அவ்வுணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டார்.
அத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது எனக் கூறிய அவர், அது பொறுப்பற்ற ஒரு செயல் எனத் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் இந்தியர்கள் என பல ஊடகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
அண்மையில் வியட்னாமில் விமான நிலையமொன்றில் சில இந்தியச் சுற்றுப் பயணிகள் ஆடியது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பேச்சுப் பொருளாக ஆன நிலையில், இப்புதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.



