Latestஇந்தியா

தமிழக அரசியலில் பரபரப்பு: திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதைத் தடுக்க அனைத்து 107 TVK எம்.எல்.ஏ-க்கள் இராஜினாமா செய்ய முடிவு?

சென்னை, மே-8 – ஏற்கனவே பரபரப்பாக உள்ள தமிழக அரசியல் நிலவரங்களை மேலும் பரபரப்பாக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 107 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக – அதிமுக இணைந்து ஆட்சியை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவ்விரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கவோ அல்லது அவர்களுக்கு ஆதரவளிக்கவோ போவதில்லை என்பதில் TVK தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொள்கை ரீதியான அரசியலை முன்னிறுத்தி, மக்களின் தீர்ப்பை மீண்டும் நாடத் தயார் என்பதை வெளிப்படுத்தவே இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 23 தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக TVK உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால விஜய் முதல்வராவது தள்ளிப் போகிறது.

காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ள போதிலும், அவருக்கு இன்னும் 5,6 இடங்களாவது தேவைப்படுகிறது.

இரு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரிய போதும், இதுவரை எதுவும் நடக்கவில்லை; பதவியேற்புக்கான ஏற்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரைமறைவில் திமுக-அதிமுக கைக்கோர்த்து ஆட்சியமைக்கலாம் எனக் கூறப்படுவதை அடுத்து, இந்த இராஜினாமா திட்டத்தை விஜய் கையிலெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இது நடத்தால், தமிழகத்தில் ஒரே நேரத்தில் அதிகப்படியான இடைத்தேர்தல்கள் வர வாய்ப்புள்ளது.

இது மாநில அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!