Latestஉலகம்

தாய்லாந்தின் பட்டாயா ஹோட்டலில் தீ விபத்து; பயணிகள் பதற்றம்

பேங்காக், மே 22 – தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள JA Plus ஹோட்டலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் பலர் சிக்கிக்கொண்டதால் அங்கு பதற்றமும் பீதியும் நிலவியது.

அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவிய நிலையில் , தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டவர்களைப் பாதுகாப்பாக மீட்கப் போராடி பின்ன ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

சுற்றுப் பயணிகள் அந்த ஹோட்டலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டபோதிலும் புகையை சுவாசித்ததால் சிலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர், நால்வர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், 178 ஹோட்டல் அறைகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தாழ்வாரங்கள் முழுவதும் புகை சூழ்ந்திருந்த நிலையில், மீட்புக் குழுவினர் மாடி மாடியாக யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனத் தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தீ முதலில் கூரையில் ஏற்பட்டு , பின்னர் வேகமாகப் கட்டிடம் முழுவதும் பரவியதாகவும் நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!