பேங்காக், ஆக 8 – தாய்லாந்தில் Mae Hong Son மாநிலத்தை சேர்ந்த ஆடவன் ஒருவன் தனது மனைவியின் வாயில் சிறு குண்டை வெடிக்க வைத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான். எனினும் Yon என்று அடையாயம் கூறப்பட்ட 54 வயதுடைய அந்த ஆடவன் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக தாயலாந்து செய்தி தளமான Thaiger தெரிவித்துள்ளது. Mueang மாவட்டத்தில்
Luen என்ற 53 வயதுடைய பெண் முதல் நாள் இரவு இறந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிற்கு போலீசார் அழைக்கப்பட்டனர். Luen -னின் தலை, அவரது வாய் மற்றும் முகத்தில் பெரிய அளவில் இரத்தக காயங்கள் காணப்பட்டன. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் Ping Pong குண்டுகளின் பகுதியும் மற்றும் சில வகையான பயன்படுத்தப்படாத குண்டுகளும் காணப்பட்டது. மேஜைப் பந்து அளவுக்கு மட்டுமே அந்த குண்டுகள் இருந்ததால் அவை மேஜைச் பந்து குண்டுகள் என விளங்கி வருகின்றன.
இரவு வேளையில் தாம் விழித்தபோது தனது மனைவி இறந்துகிடந்தது குறித்து அந்த ஆடவர் தம்மிடம் கூறியதாக சமூகத் தலைவர் ஒருவர் போலீசிடம் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த அந்த தம்பதியரின் 24 வயது மகள் தனது தாயார் கொல்லப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். ஒரே அறையில் தாங்கள் தூங்கியபோதிலும் வெடிப்பு சத்தம் எதனையும் கேட்கவில்லையென Yon கூறியதாக அமெரிக்காவின் World Journal தெரிவித்தது. ஆதாரங்களை திரட்டுவதற்காக போலீசார் தொடர்ந்து Yon- னிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.