
பேங்கோக், செப்டம்பர்-17,தாய்லாந்து, பேங்கோக் நகரில் அண்டை வீட்டாரின் குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த கோய் மீன்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 51 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால் பல மீன்கள் உயிரிழந்தன.
குளத்தின் அருகே சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, வளர்ப்பு மீன்கள் வளைந்த நிலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து உரிமையாளர் CCTV இரகசியக் கண்காணிப்பு கேமராவை பொருத்தினார்.
அதில், சுத்திசாய் பூன்லெர்ட் என்ற நபர் சைக்கிளில் வந்து, குளத்தில் இறங்கி மீன்களுக்குத் தீங்கு விளைவிப்பது பதிவானது.
பதிவான காட்சிகளின் அடிப்படையில் சுத்திசாயைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
விசாரணையில், தான் இந்தச் செயலைச் செய்ததை ஒப்புக்கொண்ட அவர், இதற்கு முன் நாய் ஒன்றிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகச் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மீது மிருக வதை சட்டம் மற்றும் அத்துமீறல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.



