தாய்லாந்து கம்போடியா எல்லையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்

பாங்காக், நவம்பர் 13 – தாய்லாந்து கம்போடியா எல்லையில் கடந்த புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.
தாய்லாந்து திசையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது என்று கம்போடிய பிரதமர் கூறினார்.
அந்த அமைதி ஒப்பந்தத்தை தாய்லாந்து அரசு தற்காலிகமாக நிறுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இச்சம்பம் நிகழ்ந்துள்ளது.
மேலும் தாய்லாந்து தரப்பில், எல்லைப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாக கூறி விசாரணை நடைபெற்று வருகிறது.
முந்தைய மோதல்களில் 43 பேர் உயிரிழந்ததுடன், 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்த புதிய சம்பவம், இரு நாடுகளுக்குமிடையேயான எல்லை மோதல் மீண்டும் வெடிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



