Latestமலேசியா

திரெங்கானு KAFA வகுப்பில் மாணவரின் கால் முறிவு: RM47,000 இழப்பீடு

திரெங்கானு, அக்டோபர் 1 – நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கில், KAFA வகுப்பின்போது உஸ்தாட் ஒருவர் தாக்கியதாகக் கூறப்பட்டு கால் முறிந்த மாணவருக்கு 47,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் 2022 ஜூலை 6ஆம் தேதி, திரெங்கானு, மாராங் (Marang) பகுதியிலுள்ள தாசெக் தேசியப் பள்ளியில் நடந்தது. அப்போது 9 வயதாக இருந்த மாணவனை உஸ்தாட் ஒருவர் தூக்கி, மர நாற்காலியில் வீசியதால் மாணவனின் வலது காலில் இரண்டு முக்கிய எலும்புகள் முறிந்தன.

காயம் காரணமாக மாணவனால் நடக்க முடியவில்லை என்றும் , அவர் காலில் மாவுக்கட்டு போடப்பட்டதுடன், சுமார் மூன்று மாதங்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

முதலில் செஷன்ஸ் நீதிமன்றம் மாணவரின் வழக்கை நிராகரித்த நிலையில், மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் அந்த முடிவை மாற்றி, 30,000 ரிங்கிட் இழப்பீடு, 17,000 ரிங்கிட் வழக்குச் செலவு மற்றும் ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியை வழங்க உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!