குவாலா சிலாங்கூர், மே-17, நாட்டில் திறந்த டோல் கட்டண வசூலிப்பு முறையை வரும் செப்டம்பர் தொடங்கி அமுல்படுத்த மேலும் 6 நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
தாய்லாந்து முதல் சிங்கப்பூர் வரைக்குமான PLUS நெடுஞ்சாலை, Seremban-Port Dickson நெடுஞ்சாலை, சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையிலான Linkedua நெடுஞ்சாலை, Cheras-Kajang வரைக்குமான Grand Saga நெடுஞ்சாலை, North Port முதல் கிள்ளான் Bukit Raja வரையிலான Grand Sepadu நெடுஞ்சாலை, Setiawangsa-Pantai Expressway ஆகியவையே அந்த 6 நெடுஞ்சாலைகளாகும்.
ஏற்கனவே அத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட 12 நிறுவனங்கள் வரிசையில் புதிதாக இந்த 6 நிறுவனங்களும் இணைவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார்.
திறந்த டோல் கட்டண முறையானது, வாகனமோட்டிகள் விரைவாகவும் எளிதாகவும் டோல் சாவடிகளில் டோல் கட்டணத்தைச் செலுத்த உதவும் வகையில் கடந்தாண்டு செப்டம்பரில் அறிமுகம் கண்டதாகும்.
கடந்த காலங்களில் சாலைக் கட்டண வசூலிப்பு Touch n Go, Smart Tag மற்றும் RFID வாயிலாகவே மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இப்போது இந்த Open Payment வசதியால் Credit card மற்றும் Debit card-களைப் பயன்படுத்தியும் சாலைக் கட்டணம் செலுத்த வாகனமோட்டிகளுக்குக் கூடுதல் தேர்வு வழங்கப்படுகிறது.
இதையடுத்து இந்த Open Payment கட்டண முறையின் செயலாக்கத்திற்காக மொத்தமாக 35 பாதைகள் திறக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் சொன்னார்.