Latestமலேசியா

தென் தாய்லாந்தில் தாக்குதல்கள்: அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

தாய்லாந்து, ஆகஸ்ட் 25 – தென் தாய்லாந்தின் பட்டானி, யாலா மற்றும் நராதிவாட் (Pattani, Yala dan Narathiwat) பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கு தங்கியுள்ள மலேசியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சம்பவங்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு Songkhla-விலுள்ள மலேசியத் துணைத் தூதர் அகமட் ஃபஹ்மி அகமட் சர்காவி (Ahmad Fahmi Ahmad Sarkawi) கேட்டுக்கொண்டார்.

மேலும், சம்பவங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து, இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும், தாய்லாந்து அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.

சொந்த வாகனங்களில் தாய்லாந்து செல்லும் மலேசியர்கள் அசல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் காப்புறுதி ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறும், தாய்லாந்தின் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!