
கிள்ளான், ஏப்ரல்-22-சிலாங்கூர், கிள்ளானில் நிகழ்ந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் 24 வயது இளைஞர், தனது சம்பளப் பணமான 400 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
Jalan Meru Tamabahan-னில் கட்டுமானப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தோளில் மாட்டும் தனது குறுக்குப் பையை வெளியில் உபகரணங்களை வைக்கும் பெட்டியில் வைத்து விட்டு அவ்வாடவர் உள்ளே சென்றுள்ளார்.
அரைமணி நேரம் கழித்து வந்துபார்த்தபோது அப்பையைக் காணவில்லை.
உடனடியாக CCTV கேமரா பதிவைப் போட்டுப் பார்த்ததில், ஹெல்மட் அணிந்த மர்ம நபர் பையைத் திருடிக் கொண்டு ஓடுவது தெரிந்தது.
அதிலிருந்த 400 ரிங்கிட் சம்பளப் பணம் பறிபோன வேதனையில் அவர் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து சந்தேக நபரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.



