
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.
இதர இருவர் நிறுவன இயக்குநர்கள் ஆவர்.
இந்த ‘கூட்டுக் களவாணிகள்’ 2018 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த மோசடியைச் செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது.
அதிலும் குறிப்பாக, அந்த NGO துணைத் தலைவர், ஏழைகளுக்குச் சென்றடைய வேண்டிய இந்த நிதியைத் தனது சொந்த முதலீடுகளுக்காகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இந்த அதிரடிச் சோதனையில் 18 சொகுசுக் கார்கள், 11 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பல்வேறு விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தவிர, 120 மில்லியன் ரிங்கிட் இருப்பு வைக்கப்பட்டிருந்த 33 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
மேல் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட ஏதுவாக, கைதான மூவரும் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதை MACC உறுதிப்படுத்தியது.



