Latestமலேசியா

நள்ளிரவுக்குப் பிறகு KLIA வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 8 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை Aerotrain சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்தச் சேவை நிறுத்தம் அக்டோபர் 8 முதல் 17ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெறும். இந்த நேரத்தில் Main Terminal அதாவது பிரதான முனையத்திற்கும் Satellite Building அதாவது செயற்கைக்கோள் முனையத்திற்குமிடையே பயணிகளை அழைத்துச் செல்ல மாற்று பேருந்து சேவை வழங்கப்படும்.

பயணிகள் விமான நிலையத்திலுள்ள வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்றி பேருந்து நிலையத்துக்குச் செல்லுமாறும், தேவையானால் விமான நிலைய ஊழியர்களிடம் உதவி பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட சோதனையின் முடிவுகள் சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும். மதிப்பீடு வெற்றிகரமாக முடிந்தால், மென்பொருள் புதுப்பிப்பு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நிரந்தரமாக செயல்படுத்தப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் Aerotrain 23.55 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதுடன், 99.9 விழுக்காடு சேவை கிடைப்புத் திறனை பதிவு செய்துள்ளதாக KLIA தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!