
நியூ யோர்க், ஆகஸ்ட்-1-அமெரிக்கா, நியூ யோர்க் மாநிலத்தில், தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத அரிய வகை ‘போர்பன் வைரஸ்’ (Bourbon Virus) நோய் தொற்று முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது மருத்துவ உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
67 வயது முதியவர் ஒருவருக்கு, _lone star_ எனப்படும் ஆபத்தான உண்ணி கடித்ததால் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, கடுமையான உடல் சோர்வு மற்றும் தசை வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசிகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், சாதாரண இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைத் துல்லியமாகக் கண்டறிவதும் கடினம் என்பதால், நோயாளிக்கு அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு இடங்கள், புற்கள் நிறைந்த வனப்பகுதிகளுக்குச் செல்வோர், முழுமையாக உடலை மூடும் ஆடைகளை அணிவதோடு, உண்ணி கடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



