
ஜோகூர் பாரு, மே 20 – பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) 2026 மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் குறித்து ஜோகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோகூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Deputy commissioner (ஹூ சுவான் ஹவாட்) Hoo Chuan Huat கூறுகையில், 32 வயது உள்ளூர் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கருப்பு உடை அணிந்த குழுவினர் அப்பெண்ணைத் தள்ளியதாகஅவர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அனைத்துலக மாநாட்டு மையமான Persada Johor International Convention Centre-ல் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டின்போது நடந்ததாகவும், சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளை, ஜோகூர் ஊடக மன்றமான Johor Media Club அமைப்பும், பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டை செய்தியாக வெளியிட வந்த ஊடகவியலாளர்களிடம் அரசியல் கட்சியின் பாதுகாப்பு குழுவினர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக போலீசில் புகார் அளித்துள்ளது.



