
லூமுட், மே-12-இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகொன்று பேராக், பங்கோர் கரையோரப் பகுதியில் கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேடி மீட்கும் நடவடிக்கையின் இரண்டாவது நாளில் கடலில் மிதந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவை முறையே 3 பெண்கள் மற்றும் 1 ஆணுடையதாகும்.
முதல் நாளில் 23 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், இன்னும் 10 பேரைக் காணவில்லை.
அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, பலத்தக் காற்று மற்றும் சீரற்ற வானிலையின் போது, அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற அந்தப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மே 9-ஆம் தேதி இந்தோனேசியாவின் கிசாரானிலிருந்து புறப்பட்ட அந்த 37 பேரும் பினாங்கு, திரங்கானு, சிலாங்கூர், கோலாலம்பூர் போன்ற இடங்களை நோக்கி சட்டவிரோதமாக அந்த படகில் பயணித்துள்ளனர்.



