
செகாமாட், ஜூலை-6 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பயன்படுத்தப்படாமல் உள்ள அரசு நிலங்களில் அரசு ஊழியர்களுக்கான வீடுகள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில், அதிகரித்து வரும் வீட்டு வாடகைச் சுமையை எதிர்கொண்டு வருவதால், குறைந்த வாடகையில் தரமான வீடுகளை வழங்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
சுங்க இலாகா, குடிநுழைவு இலாகா மற்றும் பள்ளிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்கள் இதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றார் அவர்.
ஜோகூர் செகாமாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் அவ்வாறு சொன்னார்.
முன்னதாக, மக்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் ஜோகூரில் மிகவும் மந்தமாக இருப்பதாக அன்வார் குறைக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



