Latestஉலகம்

பாகிஸ்தான் பள்ளிக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்து 28 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், அக்டோபர் 15 – பாகிஸ்தானின் பெஷாவர் (Peshawar) நகரில் பள்ளிக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், 27 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. உயிரிழந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்குட்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை குறைந்தது 45 குழந்தைகள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவசரகால மீட்புப் பிரிவு அதிகாரி தெரிவித்தார். மேலும் சில குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!