Latestமலேசியா

பிகேஆரை விட்டு விலகி பெர்சாமாவில் இணைந்த வோங் சென்

சிலாங்கூர், ஆகஸ்ட் 12 – முன்னாள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் (Wong Chen), கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருந்த பிகேஆர் (PKR) கட்சியிலிருந்து விலகி, மலேசியா பெர்சாமா கட்சியில் (Bersama) இணைந்துள்ளார்.

மூன்று தவணைகள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அவர், தாமான் புத்ரா பெர்டானா, பூச்சோங்கிலுள்ள பெர்சாமா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது முடிவை உறுதிப்படுத்தினார்.

2018ஆம் ஆண்டு முதல் சுபாங் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த வோங் சென், சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

முன்னதாக, முன்னாள் பிகேஆர் தலைவர்களான ரஃபிசி ரம்லி (Rafizi Ramli) மற்றும் நிக் நஸ்மி நிக் அகமட் (Nik Nazmi Nik Ahmad) ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகி பெர்சாமாவை வழிநடத்தச் சென்றதைத் தொடர்ந்து, வோங் சென்னும் பிகேஆரிலிருந்து விலகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!