
பினாங்கு, செப்டம்பர் 29 – பினாங்கு, பத்து பெரிங்கியிலுள்ள (Batu Ferringhi) நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் மலையேற்றம் சென்ற 20 வயது பெண்ணும் 60 வயது ஆணும் வழிதவறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர்களைத் தேடும் அவசர அழைப்பு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட இடத்தை நோக்கி தேடிச் சென்றனர்.
இருவரும் இரவு 10.40 மணியளவில் மலையடிவாரத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன், இருவரும் பாதுகாப்பாக கீழே அழைத்துவரப்பட்டனர். மீட்புப் பணி இரவு 11.52 மணிக்கு நிறைவடைந்தது.



