
புது டெல்லி, செப்டம்பர்-7,இந்தியத் தலைநகர் புது டெல்லியில் மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்த 6 மாடி கட்டடம் நேற்று மதியம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் உள்ள இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், அடித்தளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, கட்டடத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவுச் செய்யவும் பணித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



