Latestமலேசியா

பெட்ரோல் நிலையங்களில் தற்காலிக சிக்கலுக்கு மன்னிப்புக் கோரிய Shell

கோலாலம்பூர், ஏப்ரல்-15-தனது சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் குறைந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு, Shell Malaysia மன்னிப்பு கேட்டுள்ளது.

சில நிலையங்களில் தற்காலிக விநியோக சிக்கல்கள் ஏற்பட்டதாலேயே, எரிபொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்நிறுவனம் விளக்கியது.

எனினும், இந்தப் பிரச்சனை முழுமையான எரிபொருள் தட்டுப்பாடு அல்ல; மாறாக விநியோகத் தாமதம் மற்றும் அதிகமான தேவையால் ஏற்பட்ட ஒன்றே என அது கூறிற்று.

பொது மக்கள் தேவையற்ற பதட்டத்தில் அதிகமாக எரிபொருள் வாங்க வேண்டாம் எனவும் அது அறிவுறுத்தியது.

பாதிக்கப்பட்ட நிலையங்களில் விநியோகத்தை விரைவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!