Latestமலேசியா

பெட்ரோல் நிலையங்களில் பற்றாக்குறை; தேசிய அளவிலான தட்டுப்பாடு அல்ல – அந்தோணி லோக் விளக்கம்

புத்ராஜெயா, ஏப்ரல்-14-சில பெட்ரோல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, நாட்டில் மொத்தமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கான அறிகுறி அல்ல என்று அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்டவை.

அது கூட, விநியோக தாமதம் மற்றும் திடீர் தேவையின் அதிகரிப்பு போன்ற காரணங்களாலேயே இந்நிலை உருவாகியதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இதனால், இது ஒரு தேசிய அளவிலான பற்றாக்குறை அல்ல என்பதை பொது மக்கள் புரிந்து கொள்வதோடு, பதற்றமடையாமல், தேவைக்கு மீறி எரிபொருள் வாங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பிரதமர் கூறியது போல நாட்டில் எரிபொருள் கையிருப்பு தற்போது சீராகவும் போதுமானதாகவும் உள்ளது என்றார் அவர்.

எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இரயில் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்க, போக்குவரத்து அமைச்சில் இன்று பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்தப் பிறகு அந்தோணி லோக் அவ்வாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!