பேக்கோக், ஆகஸ்ட் -23, தாய்லாந்தில் மூத்த அரசியல்வாதி ஒருவரால் பெண் செய்தியாளர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.
கடந்த மாதம் அந்நாட்டின் புதியப் பிரதமர் தேர்வு குறித்து கேட்ட போதே, அச்செய்தியாளர் தலையில் தாக்கப்பட்டார்.
தாக்கியவர் அரசியல்வாதி மட்டுமல்ல, முன்னாள் இராணுவத் தலைவருமான பிரவீத் வோங்சுவோன் (Pravit Wongsuwon) ஆவார்.
விஷயம் வைரலானதும், அப்பெண் நிருபரை பிரவீத்துக்கு நன்கு தெரியும் என்றும், நடந்தவற்றுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அவர் கட்சி விளக்கம் கொடுத்தது.
ஆனால், அவரின் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என தாய்லாந்து செய்தியாளர் சங்கங்களும், ஊடக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அது குறித்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற சபாநாயகரையும் அவை வலியுறுத்தியுள்ளன.