Latestஉலகம்

பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகளின் ஊடுருவல்: செயுட்டா எல்லையில் 500 மீட்டர் நீளமுள்ள கடல் தடுப்பை அமைத்தது ஸ்பெயின்

செயுட்டா, ஆகஸ்ட்.03- ஸ்பெயின் வட ஆப்பிரிக்கவுடனான தனது எல்லைப் பகுதியான Ceuta மற்றும் மொராக்கோ ஆகியவற்றுக்கு இடையிலான கடல் எல்லையில் 500 மீட்டர் நீளமுள்ள நீரில் மிதக்கும் தடுப்பை அமைத்துள்ளது.ஆயிரக்கணக்கான குடியேறிகள் அந்த எல்லையை ஊடுருவி உள்ளே நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் அப்பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. Ceutaவில் உள்ள தராஜல் கடற்கரைக்கும் மொராக்கோவிற்கும் அந்த மிதக்கும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

எல்லையை ஊடுருவி நுழைந்த சமயம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், நீரில் மூழ்கியும் குறைந்தது 67 குடியேறிகள் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 50,000 முதல் 60,000 வரையிலான குடியேறிகள் அப்பகுதிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்தனர்.இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் விரைவில் திரும்பிச் சென்று விட்டனர்.சிலர் பேருந்துகள் மூலமாகவும், மேலும் சிலர் காவல்துறை வாகனங்கள் மூலமாகவும் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனிடையே அச்சம்பவம் குறித்து சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பரவலாகப் பேசி வரும் நிலையில்,ஸ்பெயின் அரசாங்கம் அதனைக் கடுமையாகக் கடுமையாகச் சாடியுள்ளது. தங்களின் எல்லைப் பகுதியில் நுழைந்த குடியேறிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அது, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாகக் கூறியுள்ளது.

பல குடியேறிகள் வேலை தேடியே ஸ்பெயின் பகுதிக்குள் நுழையவதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!