
பேராக், ஆகஸ்ட் 28 – பேராக், கெரிக் அருகேயுள்ள தெமெங்கோர் (temenggor) பகுதியில் நேற்று நள்ளிரவு 12.06 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஹுலு பேராக்கிலிருந்து 9 கிலோமீட்டர் வடகிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கெரிக் பகுதியிலும் உணரப்பட்டன. எனினும், சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என MetMalaysia தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள், MetMalaysia வழங்கியுள்ள கேள்வித்தாளை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலைமையைத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் கூறப்பட்டது.



