
ஈப்போ, ஜூலை 28 – 118.87 கிராம் ஹெராயின் போதைப்பொருளை விநியோகித்த ஆறு சகோதரர்கள் இன்று ஈப்போ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி ஈப்போ செமோர், கம்போங் சே சைனல் தம்பாஹான் 1 ( Chemor, Kampung Che Zainal Tambahan 1, ) பகுதியிலுள்ள குடிசையில் அவர்கள் கூட்டாகக் இக்குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதால், அவர்களிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவர்களின் இரசாயன அறிக்கையின் முடிவை அறிந்து கொள்வதற்கு நீதிமன்றம் இவ்வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



