Latestஉலகம்

போலி மோசடி திட்டம்; நியூசிலாந்து ஆடவர் RM200,000 இழந்தார்

ஜோகூர் பாரு, நவ 29 – 61 வயதான ஓய்வுபெற்ற நியூசிலாந்து ஆடவர் ஒருவர் தனது சேமிப்பை வங்கிக் கணக்கிற்கு மாற்றிய 23 நாட்களுக்குப் பிறகு போலி ஆன்லைன் முதலீட்டில் 216,000 ரிங்கிட்டை இழந்தார். இந்த விவகாரத்தில் தங்களது வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளித்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், இதுபோன்ற மோசடிகளுக்கு வழி வகுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர்
பல்விர் சிங் (Balveer Singh ) எச்சரித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி தம்மை வோங் என் அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் முதலீடு செய்யும் மூலதனத்திற்கு ஏற்ப மாதத்திற்கு 3 விழுக்காடு வருமானம் கிடைக்கும் என கூறியதால் அக்டோபர் 3 ஆம் தேதிக்கும் 25 ஆம் தேதிக்குமிடையே 216,000 ரிங்கிட்டை ஒரு நிறுவனத்தின் கணக்கில் 27 முறை பட்டுவாடா செய்ததாக பாதிக்கப்பட்ட ஆடவர் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு ஆதாயத் தொகையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது மேலும் பணத்தை பட்டுவாடா செய்யும்படி வோங் கேட்டுக்கொண்டதால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த ஆடவர் போலீசில் புகார் செய்ததாக பல்விர் சிங் கூறினார். மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!