Latestமலேசியா

மலாக்கா செமாபோக்–புக்கிட் கட்டில் சாலையில் நில அமிழ்வு; செமாபோக் நோக்கி செல்லும் 2 சாலைகள் மூடல்

மலாக்கா, ஜூன்-17-மலாக்கா செமாபோக்–புக்கிட் கட்டில் (Jalan Semabok-Bukit Katil) சாலையில் இன்று காலை ஏற்பட்ட நில அமிழ்வைத் தொடர்ந்து, செமாபோக் (Semabok) நோக்கிச் செல்லும் இரண்டு சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சுமார் 4 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட சாலைப்பகுதி பாதிக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணையில், ஒளியிழை (Fiber Optic) கேபிள் பதிக்கும் பணியின் போது 600 மில்லிமீட்டர் அளவுள்ள முக்கிய நீர்க்குழாய் சேதமடைந்ததால், நிலத்தடியில் அரிப்பு ஏற்பட்டு சாலை தாழ்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பழுதுபார்ப்பு பணிகள் சுமார் 10 மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைப் பயனாளர்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவதுடன், அப்பகுதியில் கவனமாகச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!