Latestமலேசியா

அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முடிவை லோக் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர், செப்டம்பர் 23 – போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, லோக் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென சில தரப்பினர் விடுக்கும் அழுத்தத்திற்கு DAP அடிபணியக்கூடாது என அன்வார் தெரிவித்துள்ளார்.

லோக்கின் கொள்கை நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகக் கூறிய அன்வார், மன்னிப்பு வழங்கும் முடிவை அவர் முன்மொழியவில்லை என்றும், அதற்கு எதிராக தம்மால் முடிந்தவரை முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், லோக்குடன் மீண்டும் கலந்துரையாடி, பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நஜீப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு தொடர்பாக தமக்கும் அம்னோ தலைமையகத்திற்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவதை அன்வார் மறுத்தார். நாட்டின் நிர்வாகம், அரசியல் நிலைத்தன்மை, மலாய் ஆட்சியாளர்களுடன் நல்லுறவு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!