
மலாக்கா, ஜூலை-14 – மலாக்காவில் 10 சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது வியாபாரி ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
Duyong மற்றும் Telok Mas பகுதிகளில் இச்சம்பவம் நடந்துள்ளதை, மாநில போலீஸ் உறுதிப்படுத்தியது.
Taman Desa Duyong சமூக மண்டபத்தில் ஞாயிறு மாலை 6 மணியளவில் பொது மக்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
8 முதல் 13 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் தொடங்கி இந்த மாதம் வரை இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
விளையாடும் மைதானங்கள் அல்லது சூராவ் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே சிறுவர்களை அணுகி அந்நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் சிலரை அவர் நீண்ட நாட்களாகவே அறிந்திருக்கிறார்.
சந்தேக நபர் தற்போது விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.



