Latestமலேசியா

மலாக்காவில் காருக்குள் பாம்பை நுழைக்க முயன்ற சம்பவம்; இளம்பெண்ணின் பரபரப்பு பதிவு

மலாக்கா, ஜூன்-24 – மலாக்கா பண்டார் ஹிலிர் (Bandar Hilir) பகுதியிலுள்ள ‘Stadthuys’ கட்டிடம் அருகே, பாம்புடன் வந்த ஒருவர் காருக்குள் அதனை நுழைக்க முயன்றதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான அப்பெண் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இரவு தனது நண்பர் மற்றும் தம்பியுடன் காரில் இருந்தபோது, பாம்பை கையில் வைத்திருந்த ஒருவர் அவர்களது வாகனத்தை அணுகியுள்ளார்.

ஆரம்பத்தில் அது ஒரு வேடிக்கை என்று நினைத்த அவர், பின்னர் அந்த நபர் திறந்திருந்த கார் கண்ணாடி வழியாக பாம்பை உள்ளே தள்ள முயன்றதாக கூறினார். பலமுறை வேண்டிக்கொண்டபோதும் அவர் தனது செயலை நிறுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் பதற்றமடைந்த அந்த இளம்பெண், பாம்பைத் தவிர்க்க முயன்றபோது தனது கார் இன்னும் இயக்க நிலையில் இருந்ததை மறந்துவிட்டதாக கூறினார். அதனால் கார் திடீரென முன்னோக்கி நகர்ந்ததெனவும், அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பெறப்படவில்லை என மலாக்கா தெங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மலாக்கா வரலாற்று மாநகராட்சி (MBMB) அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!