
மலேசியத் தேர்தலில் முறைகேடு செய்யும் முயற்சி தொடர்பான Anthropic நிறுவனத்தின் அறிக்கை குறித்து தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஆய்வு செய்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த AI நிறுவனமான Anthropic, மலேசிய வாக்காளர்களைக் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் ‘கையாடல்’ நடவடிக்கையைக் கண்டறிந்து முடக்கியுள்ளதாகத் தெரிவித்து, முன்னதாகப் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, சுமார் 1,000 போலி சமூக ஊடகக் கணக்குகள், போலி செய்தித் தளம் மற்றும் ஜோடிக்கப்பட்ட உளவுத் தரவுகள் ஆகியவை மூலம் ‘Claude’ AI மாதிரியைப் பயன்படுத்தி வாக்காளர்களின் விவரங்களைச் சேகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதோடு, இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் MCMC-யுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றதாகவும், ஆனால் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் Anthropic குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள MCMC, இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கருதுவதாகவும், மேல் விவரங்களைச் சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் அவ்வாணையம் தெளிவுபடுத்தியது.



