Latestஉலகம்

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் 44 கோடி ரூபாய் பிணைத்தொகைக்குப் பின் விடுதலை

பமாக்கோ, ஜூலை-28-மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 75 வயது இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர், சுமார் 3 மாத கால சிறைபிடிப்புக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா, ​குஜராத்தைச் சேர்ந்த Dhiru Ramani கடந்த ஏப்ரல் மாதம் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டார்.

​ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் சுமார் 100 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினர் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின், தொகை குறைக்கப்பட்டது.

​கடைசியில், சுமார் 44 கோடி ரூபாய் அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு 18.77 மில்லியன் பிணைத்தொகையாக வழங்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

​அவருடன் கடத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Dhiru Ramani தற்போது நலமுடன் இருப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!